சிபிஎஸ்இ முடிவை பொறுத்தே தமிழக அரசின் முடிவு: அமைச்சர் விஜயபாஸ்கர்

  Newstm Desk   | Last Modified : 11 Jul, 2018 11:27 am

government-will-decide-according-to-cbse-s-decision-in-neet-issue

சென்னை: தமிழக மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்குவது குறித்து சிபிஎஸ்இ முடிவை பொறுத்து தமிழக அரசு முடிவெடுக்கும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

நீட் தேர்வில் தமிழ்மொழி வினாத்தாள்களில் பிழை இருப்பதாக உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், பிழை இருந்த 49 வினாக்களுக்கு 4 மதிப்பெண்கள் வீதம் தமிழில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கூடுதலாக 196 மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் இந்த திருத்தம் செய்யப்பட்ட பிறகு மீண்டும் மதிப்பெண் பட்டியலை சிபிஎஸ்இ வெளியிட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதோடு தற்போது நடைபெற்று வரும் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வை நிறுத்தவும் நீதிமன்றம் தெரிவித்தது. 

இந்நிலையில் சென்னை பெசன்ட் நகரில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், "நீட் தேர்வு விவகாரத்தில் சிபிஎஸ்இ எடுக்கும் முடிவு. மேலும் இதுகுறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசிக்கப்படும். தமிழக மாணவர்களுக்கு சாதகமாக தான் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்" என்றார். 

Newstm.in

Advertisement:
[X] Close