கட்சியின் தலைவரை வெளியேறுங்கள் என்று சொல்வதுதான் தமிழகத்தின் விருந்தோம்பலா? - தமிழிசை

  Newstm Desk   | Last Modified : 12 Jul, 2018 07:46 am

tamilisai-soundararajan-replied-to-kanimozhi

ஒரு தேசிய கட்சியின் தலைவரை வெளியேறுங்கள் என்று சொல்வதுதான் தமிழகத்தின் விருந்தோம்பலா? என தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூரில் அழகுமுத்துக்கோன் சிலைக்கு மரியாதை செலுத்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தி.மு.க எம்.பி கனிமொழியின் பேச்சை நான் வன்மையாக கண்டிக்கிறேன். பா.ஜ.க ஒரு தேசிய கட்சி. மரியாதைக்குரிய தலைவர்கள் இருக்கின்ற கட்சி. அவர்களை கேலி கூத்தாக்குவது இவர்களின் மீம்ஸ் தான். ஆங்கில நாளிதழ் ஒன்று நடத்திய புலனாய்வில் இணையத்தில் மற்ற கட்சிகளை எதிர்த்து பதிவிடுபவர்களுக்கு தி.மு.க அனுசரணையாக நடந்துகொள்கிறது என செய்தி வெளியாகியுள்ளது. அவர்கள்தான் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாக்குகின்றனர். 

பிற கட்சியின் தலைவர்க்ளை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். ஒரு கட்சியின் தலைவரை வெளியேறுங்கள் என்று சொல்வது தான் தமிழகத்தின் விருந்தோம்பலா? இவர்களைப்போல் நாங்கள் ஒருபோதும் தரம் தாழ்ந்த அரசியலில் ஈடுபட மாட்டோம். 

தமிழகம் ஊழல் நிறைந்த மாநிலம் என அமித்ஷா கூறியதற்கு, பா.ஜ.கவின் பினாமி ஆட்சிதான் தமிழகத்தில் நடைபெறுகிறது என தி.மு.க எம்.பி கனிமொழி பதில் கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 50 ஆண்டுகளாக நேர்மையான நிர்வாகம் தமிழகத்தில் இல்லை. நேர்மையான நிர்வாகம் வரவேண்டும் என்பதுதான் பா.ஜ.கவின் விருப்பம்" என்றார். 

Advertisement:
[X] Close