இந்திய ராணுவத்தில் 2000 பணியிடங்களுக்கு ஆள்கள் தேர்வு

Last Modified : 09 Jul, 2016 07:19 am

இந்திய ராணுவத்தில் தமிழகப் பிரிவில் 1,600 ராணுவப் பணியிடங்கள், 400 தொழில்நுட்ப பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கான ஆள் சேர்ப்பு முகாம் ஆகஸ்ட் 19 முதல் 31 வரை திருவண்ணாமலையிலும், ஆகஸ்ட் 2 முதல் 10 வரை ராமநாதபுரத்திலும், நவம்பர் 11 முதல் 20 வரை மதுரையிலும் நடக்கிறது. இந்த முகாமில் கலந்து கொள்ள விரும்புவோர் www.joinindianarmy.nic.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். தகுதி உடையோர்க்கு மின்னஞ்சல் மூலம் அழைப்பு விடுக்கப்படும். உடல் தகுதி தேர்வு மற்றும் எழுத்து தேர்வின் அடிப்படையில் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.

Advertisement:
[X] Close