கேரளா - கர்நாடகாவிலும் டிரெக்கிங் செல்ல தடை

  Shalini Chandra Sekar   | Last Modified : 13 Mar, 2018 12:51 pm


தேனியில் நடந்த காட்டுத் தீ சம்பவம் கடந்த இரண்டு நாட்களாகத் தமிழ்நாட்டையே உலுக்கியது. டிரெக்கிங் சென்றவர்கள் இந்தக் காட்டுத் தீயில் பலமாகச் சிக்கினர். இதில் 11 பேர் இறந்து போக, மற்றவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். 

இந்தச் சம்பவம் தமிழ்நாட்டை மட்டுமல்ல, பக்கத்து மாநிலங்களையும் வெகுவாகப் பாதித்துள்ளது. அதனால் கேரளா மற்றும் கர்நாடக மாநில அரசுகள் தங்கள் மாநிலங்களில் டிரெக்கிங் செல்வதற்குத் தற்காலிக தடை விதித்துள்ளன. மறு அறிக்கை வரும் வரை பொதுமக்கள் யாரும் காட்டிற்குள் செல்லக் கூடாது என்றும் எச்சரித்துள்ளனர்.

..
Advertisement:
[X] Close