ரஜினிகாந்த் தமிழர் அல்ல, கர்நாடகக் காவியின் தூதுவர் - இயக்குநர் பாரதிராஜா கடும் தாக்கு

  Newstm Desk   | Last Modified : 16 Apr, 2018 05:01 pm


ரஜினிகாந்த் தமிழர் அல்ல, கர்நாடகக் காவியின் தூதுவர் என இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் ஐ.பி.எல் போட்டிக்கு எதிராகவும், காவிரி வாரியம் அமைக்கக்கோரியும் நடந்த போராட்டத்தில் பணியில் இருந்த காவலரை நாம் தமிழர் கட்சியினர் தாக்கினர். இது தொடர்பாக காவல்துறை அக்கட்சியைச் சேர்ந்த 8 பேரை கைது செய்துள்ளது. 

இந்த சம்பவம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த், 'பணியில் இருந்த ஒரு காவலரை தாக்கியது வன்முறையின் உச்சம்' என ஆவேசமாக கூறியிருந்தார். இதற்கு சமூக வலைத்தளங்களில் பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பின. 

தற்போது ரஜினியின் ட்வீட்டிற்கு எதிராக இயக்குநர் பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "நம் முதுகில் ஏறி உட்கார்ந்து கொண்டு நம் மீது கத்தி வைத்து பதம் பார்க்க நினைக்கும் ரஜினி அவர்களே! வன்முறையின் உச்சம் எது? அறவழியில் போராடியவர்கள் தான் வன்முறையாளர்களா? காவிரி போராட்டத்தில் தமிழர்கள் எல்லாம் ஒன்றிணைந்துவிட்டார்கள் என்ற காழ்ப்புணர்ச்சியால் பேசும் பேச்சு இது. ரஜினிகாந்த் தமிழர் அல்ல, இப்போது தான் தெரிகிறது. அவர் கர்நாடகக் காவியின் தூதுவர். உங்கள் வேஷம் மெல்ல மெல்ல கலைகிறது. விரைவில் நீங்கள் தமிழக மக்களால் ஓரங்கபடப்படுவீர்கள். 

இலங்கை தமிழர், நியூட்ரினோ மற்றும் மீத்தேன் விவகாரம் குறித்து ரஜினி வாய்திறக்காதது ஏன்? தமிழன் கொட்டி கொடுத்த பணத்தை வைத்து சேர்த்து வைத்த  செல்வத்தில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக நீங்கள் என்ன செய்தீர்கள்?" என ரஜினிக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். 

இயக்குநர் பாரதிராஜாவின் அறிக்கை கீழே: 


Advertisement:
[X] Close