பேராசிரியை குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம்: ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் அறிவிப்பு

  Newstm Desk   | Last Modified : 19 Apr, 2018 02:21 pm


பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் பொதுமக்கள் யாரேனும் தகவல் தெரிந்தால் நேரடியாக தெரிவிக்கலாம் என ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் தெரிவித்துள்ளார். 

மாணவிகளை தவறான பாதையில் வழிநடத்திச் சென்றதாக குற்றம் சாட்டப்பட்டதில் பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டு மதுரையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி தரப்பில் குழு அமைக்கப்பட்ட நிலையில் ஆளுநர் தரப்பில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று அவர் தனது விசாரணையை மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் துணை வேந்தர் மற்றும் பதிவாளர் ஆகியோரிடம் தொடங்கியுள்ளார். நாளை விருதுநகர், அருப்புக்கோட்டை ஆகிய பகுதிகளிலும், ஆடியோவில் பேசிய நான்கு மாணவிகளிடமும் விசாரணை மேற்கொள்கிறார். 

இதனையடுத்து இந்த விவகாரத்தில் பொதுமக்கள் தகவல் தெரிந்தால் தெரிவிக்கலாம் என அதிகாரி சந்தானம் அறிவித்துள்ளார். அதன்படி, ஏப்ரல் 21, 25, 26 ஆகிய தேதிகளில் பொதுமக்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என யார் வேண்டுமானாலும் நேரடியாகவோ அல்லது எழுத்து பூர்வமாகவோ தங்களுக்கு தெரிந்த தகவல்களை தெரிவிக்கலாம். மதுரை அரசு விருந்தினர் மாளிகையில் காலை 10 மணி முதல் பகல் 1.30 வரை வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

..
Advertisement:
[X] Close