2018ல் சென்னையின் வெப்பமான நாள் இன்று: வெதர்மேன் அப்டேட்

  Newstm Desk   | Last Modified : 20 Apr, 2018 07:06 pm

2018ல் இன்று தான் சென்னையில் வெப்பம் அதிகமாக பதிவாகி உள்ளதாக வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்து இருப்பதாவது:

சென்னையில் இன்று 97 டிகிரி வெப்பம் பதிவாகி உள்ளது. மேற்கில் இருந்து வீசும் காற்றும் கடற்கரையில் இருந்து வீசும் காற்றும் பலமாக இருந்ததால் இது எதிர்பார்க்கப்பட்டது தான். இந்தாண்டில் இன்று தான் அதிகமான வெப்பம் பதிவாகி உள்ளது.

வரும் நாட்களில் சென்னையில் 96-97 டிகிரி வரை வெப்பம் பதிவாகும். இது அனல்காற்றாக மாற வாய்ப்பு இல்லை. எனவே நம்மால் தாக்கபிடிக்கும் அளவுக்கு வெயில் இருக்கும். இந்தியாவின் மற்ற பகுதிகளில் 104 டிகிரி வரை வெப்பம் பதிவாகி உள்ளது. தமிழகத்திலும் வேலூர்-திருத்தணியில் 104 டிகிரி வரை வெயில் சுட்டெரிக்கிறது. வடதமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று பதிவிட்டுள்ளார். 

Advertisement:
[X] Close