காவிரியை விட மெரினா முக்கியமா? அரசுக்கு நீதிமன்றம் கேள்வி

  Newstm Desk   | Last Modified : 24 Apr, 2018 07:03 pm

போராட்டங்களை கட்டுப்படுத்த மட்டுமே அரசுக்கு அனுமதி உண்டு என்றும் தடுக்க அனுமதி இல்லை என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக மெரினா கடற்கரையில் 90 நாட்கள் உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி அளிக்கக் கோரி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் பி.அய்யாகண்ணு, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

ஆனால், மெரினா மக்கள் அதிகமாக கூடும் இடம் என்பதால் 90 நாட்கள் அனுமதி அளிக்க முடியாது என்றும் டெல்லியில் நடந்தது போல அரை நிர்வாண போராட்டங்கள் நடத்த கூடாது என்றும் கூறிய நீதிமன்றம், அய்யாகண்ணு தரப்பில் 30 நாட்கள் உண்ணாவிரதம் இருக்க அனுமதி அளிக்கும் விவகாரத்தில் காவல்துறை தரப்பில் பதில் அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்து இருந்தது. அதன் மெரினாவில் எந்தவிதமான போராட்டமும் நடத்த அனுமதி அளிக்க முடியாது என காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் போராட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட ஏதேனும் ஒரு இடத்தில் அய்யாக்கண்ணு உண்ணாவிரதம் இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. 

இவ்வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்ற நிலையில், போராட்டத்தை ஒழுங்குபடுத்த மட்டுமே அரசுக்கு அதிகாரம் உள்ளது, போராட்டத்தை தடுக்க அதிகாரமில்லை என உயர்நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.

காவிரி விவகாரத்தைவிட மெரினாதான் தமிழக அரசுக்கு முக்கியமா? கிறிஸ்துமஸ், ரம்ஜான் போன்ற பண்டிகை காலங்களில் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்று கூற முடியுமா? எனவும் கேள்வியை எழுப்பி நீதிமன்றம் எழுப்பி தீர்ப்பு தேதியை ஒத்திவைத்தது. 

Advertisement:
[X] Close