• கர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு
  • வாஜ்பாய் உடலுக்கு ஆளுநர், இ.பி.எஸ், ஸ்டாலின் அஞ்சலி!
  • வாஜ்பாய் உடலுக்கு சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரனாப் அஞ்சலி!
  • முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்!
  • அமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்

5ம் தேதி முழு அடைப்பு: அனைத்துக் கட்சிகள் முடிவு

Last Modified : 01 Apr, 2018 01:30 pm


இன்று நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், வரும் 5ம் தேதி தமிழகத்தில் முழுஅடைப்பு நடத்தவுள்ளதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக எடுக்கவுள்ள நடவடிக்கைகள் குறித்து, திமுக தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் இன்று சென்னையில் கூடியது. 

இந்த கூட்டத்தில், திராவிட கழகம் கட்சியின் வீரமணி , தமிழக காங்கிரஸ் கட்சியின் திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட பல கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக வரும் 5ம்  தேதி தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டது. முழு அடைப்பில் கலந்து கொள்ள மற்ற கட்சிகளுக்கும், தொழிலாளர் சங்கங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. 

மேலும், பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல மத்திய அமைச்சர்கள் வரும் ஏப்ரல் 11ம் தேதி தமிழகம் வரவுள்ள நிலையில், அவர்கள் அனைவருக்கும் எதிராக கருப்பு கோடி காட்டி போராட்டம் நடத்தவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

Advertisement:
[X] Close