நான் பேசியது எடிட் செய்யப்பட்டுள்ளது - நிர்மலா தேவி வாக்குமூலம்

  Newstm Desk   | Last Modified : 25 Apr, 2018 12:29 pm


மாணவிகளைத் தவறாக வழிநடத்த முயன்ற விவகாரத்தில் நிர்மலாதேவியின் குரல் மாதிரியை சிபிசிஐடி காவல்துறையினர் ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர். இந்நிலையில், வெளிவந்த ஆடியோ யாரோ ஒருவரால் வெட்டப்பட்டுச் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்பட்டதாக நிர்மலா தேவி குற்றஞ்சாட்டியுள்ளார். 

மாணவிகளைத் தவறாக வழிநடத்த முயன்ற விவகாரத்தில் பேராசிரியை நிர்மலாதேவி பேசிய ஆடியோ தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதுதொடர்பா‌க பிரச்னை பூதாகரமாக வெளியான தினத்தன்று பேட்டி அளித்த நிர்மலாதேவி, அது என்னுடைய குரல்தான். ஆனால், தவறான வழியில் நான் பேசவில்லை என்று கூறியிருந்தார். 

பிரச்னை ஆளுநர் வரை சென்றதால், நிர்மலா தேவியைக் கைது செய்தது போலீஸ். அவரிடம் தற்போது போலீசார் வாக்குமூலம் பெற்றுள்ளனர். அதில். "மாணவிகளிடம் பேசியது நாம் தான். அது என்னுடைய குரல்தான். ஆனால், தவறான நோக்கத்தில் மாணவிகளிடம் பேசவில்லை. என் மீது தவறு இருப்பது போன்ற பிம்பத்தை ஏற்படுத்துவதற்காக, அந்த ஆடியோவை யாரோ எடிட் செய்து, சமூக வலைத்தளங்களில் பரப்பியுள்ளனர்" என்று தெரிவித்திருக்கிறாராம். 

அது தன்னுடைய குரல்தான் என்று நிர்மலா தேவி உறுதிப்படுத்தியுள்ள நிலையில் அதை உறுதி செய்ய நிர்மலா தேவி மாணவிகளிடம் பேசிய ஆடியோ பதிவையும், அவரது குரல் மாதிரியையும் சென்னையில் உள்ள குரல் ஒப்பீட்டு ஆய்வகத்திற்குச் சிபிசிஐடி போலீஸார் அனுப்பி வைத்துள்ளனர். 

இந்நிலையில், பேராசிரியை விவகாரத்தில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக உதவிப் பேராசியர் முருகனுக்குத் தொடர்பு இருப்பதாகத் தகவல் வெளியானது. தலைமறைவாக இருந்துவந்த முருகன், வருகை பதிவேட்டில் கையெழுத்திடுவதற்காகப் பல்கலைக்கழகத்திற்கு வந்தபோது சிபிசிஐடி காவலர்களின் வளையத்தில் சிக்கினார். இதையடுத்து முருகனைக் கைது செய்த போலீஸார் அவரிடம் 2 நாட்களாகத் தொடர்ந்து விசாரணை நடத்திவந்தனர். பின்னர், சாத்தூர் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தினர். அவரிடம் மேலும் விசாரணை நடத்த வேண்டியுள்ளதால் சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு அனுமதிக்க வேண்டும என்று மனு தாக்கல் செய்தனர்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, முருகனுக்கு ஐந்து நாள் சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

Advertisement:
[X] Close