நாளை தூத்துக்குடி செல்கிறார் துணை முதல்வர்

  Newstm Desk   | Last Modified : 27 May, 2018 12:35 pm

தூத்துக்குடியில் நடந்த கலவரத்திற்கு பிறகு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நாளை அங்கு செல்ல உள்ளார். 

ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின் 100வது நாளில் நடந்த கலவரத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதற்கு பல அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் கலவரம் நடந்த பிறகும் தூத்துக்குடிக்கு அரசு சார்பில் யாரும் செல்லவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. 

இந்நிலையில் இன்று காலை அமைச்சர் கடம்பூர் ராஜு தூத்துக்குடி சென்று மாவட்ட ஆட்சியருடன் ஆய்வு நடத்தினார். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களையும் நேரில் பார்த்தார். 

இதனைத் தொடர்ந்து துணை முதல் ஓ.பன்னீர் செல்வம் நாளை தூத்துக்குடி செல்ல இருப்பதாக தெரிகிறது. 

..
Advertisement:
[X] Close