ஆட்களை திரட்டி வருகிறேன், எங்களை சுடுங்கள்: வைகோ

  Newstm Desk   | Last Modified : 27 May, 2018 02:44 pm

தூத்துக்குடிக்கு ஆட்களை திரட்டி வருகிறோம் எங்களை சுடுங்கள் என்று வைகோ கூறியுள்ளார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 22ந் தேதி  100வது நாளாக போரட்டம் நடைபெற்றது. அன்று போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியாகினர். இந்த சம்பவத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ பேசினார். 

அப்போது, ''முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பார்க்க தூத்துக்குடி மக்கள் ஆர்வமாக உள்ளனர். ஸ்டெர்லைட் ஆலையை நடத்தினால் இன்னும் 10 மாவட்டங்களில் இருந்து ஆட்களை திரட்டி போராட்டம் நடத்துவேன். அப்போது எங்களை சுடுங்கள் பார்க்கலாம். ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதாக தமிழக அரசு கூறுவது ஏமாற்றும் வேலை. இன்னும் எத்தனை நீதிமன்றத்தில் உத்தரவு வாங்கினாலும் ஸ்டெர்லைட் ஆலையை இயங்க விடமாட்டோம் போராட்டம் தொடரும்" என்றார். 

..
Advertisement:
[X] Close