தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: இழப்பீடு ரூ.20 லட்சமாக உயர்வு!

Last Modified : 27 May, 2018 05:16 pm


தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு வழங்கப்பட இருந்த இழப்பீட்டை, 10 லட்சத்தில் இருந்து 20 லட்சம் ரூபாயாக தமிழக அரசு உயர்த்தியுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் நடந்த போராட்டத்தின் போது, காவல்துறையினர் போராட்டகாரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 13 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

அதன் பின், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. இது பல தரப்பில் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில், இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 

இறந்தவர்கள் குடும்பங்களுக்கு வழங்கப்பட இருந்த 10 லட்ச ரூபாய், 20 லட்ச ரூபாயாகவும், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு வழங்கப்பட இருந்த 3 லட்ச ரூபாய், 5 லட்ச ரூபாயாகவும், லேசான காயம் ஏற்பட்டவர்களுக்கு வழங்கப்பட இருந்த 1 லட்ச ரூபாய் 1.5 லட்ச ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் உயர் அதிகாரிகள், அந்த பகுதியில் நடத்திய ஆய்வுக்கு பின்னர், பாதிக்கப்பட்டவர்கள் அதிக இழப்பீடு கோரியதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

..
Advertisement:
[X] Close