• வாஜ்பாய் உடலுக்கு சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரனாப் அஞ்சலி!
  • முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்!
  • அமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்
  • 5 மாவட்டங்களில் கனமழை - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • கூட்டத்தில் சிக்கிய ராகுல் : மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்

சுதந்திரமாக நடமாடும் எஸ்.வி.சேகர்... புகைப்பட ஆதாரங்கள் வெளியானது!

  Newstm Desk   | Last Modified : 13 Jun, 2018 08:11 pm

sv-sekar-s-photos-on-social-media

பெண் பத்திரிக்கையாளர் குறித்து தனது முகநூலில் இழிவாக பதிவு செய்ததாக நடிகர் எஸ்.விசேகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் சுதந்திரமாக காரில் சுற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன.

எஸ்.வி.சேகர் குறித்து சட்டப்பேரவையில் பேச அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து, ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.கவினர் அவையில் இருந்து  வெளிநடப்பு செய்தனர். இந்த நிலையில், எஸ்.வி.சேகர் சுதந்திரமாக காரில் செல்லும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன. 

வெளிநடப்புக்கு பிறகு வெளியே வந்த எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின்,  "பத்திரிக்கையாளர்கள் குறித்து எஸ்.வி.சேகர் முகநூலில் பதிவு செய்ததற்கு எதிராக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்து, அதனை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இதையடுத்து அவரை கைது செய்ய காவல்துறை தீவிரமாக தேடி வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், எஸ்.வி.சேகரோ தமிழகத்தில் சுதந்திரமாக நடமாடுகிறார். அரசு அவரை கைது செய்ய தயங்குகிறது. மத்திய அமைச்சர் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியிலும் அவர் பங்கெடுத்துள்ளார். 

சமீபத்தில் இரு தினங்களுக்கு முன்பாக கூட, அண்ணா நகர் கந்தசாமி நாயுடு கல்லூரியில் தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி சங்கம் சார்பில் தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் சின்னத்திரை நடிகர் என்ற அடிப்படையில் எஸ்.வி.சேகர் நேரில் வந்து வாக்களித்துள்ளார். அவர் போலீஸ் பாதுகாப்புடன் வந்துள்ளது தான் இங்கு கவனிக்க வேண்டியது. மேலும், அங்கு உயர் அதிகாரிகள் எல்லாம் இருந்துள்ளார்கள். தலைமை செயலரின் உறவினர் என்பதால் அரசு நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது’’ எனக் குற்றம்சாட்டினார்.

அதனை மெய்ப்பிக்கும் வகையில், எஸ்.வி.சேகரை போலீசார் தேடி வரும் வேளையில், அவரது சில படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியிருக்கின்றன. 

சென்னையில் எஸ்.வி.சேகரின் பேரனுக்கு நாளை பிறந்த நாள் விழா கொண்டாடப்பட உள்ளது. இதற்காக அவரது வீட்டில் தடபுடலாக ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதனை கொண்டாட முக்கிய நபர்களுக்கு பத்திரிக்கை கொடுக்க எஸ்.வி.சேகர் திட்டமிட்டுள்ளார். சில முக்கிய பாஜக பிரபலங்கள், சில ஆளும் கட்சி பிரபலங்கள், சினிமா நண்பர்கள், நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கு இதற்காக பத்திரிக்கை கொடுத்து வருகிறார். நாளை நடைபெறும் நிகழ்வில் அவர் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது.

இதற்காக, கடந்த ஓரிரு நாட்களாக  சென்னையில் பத்திரிக்கை கொடுத்து வருகிறார். அப்படி பத்திரிகை கொடுத்துவிட்டு, ஹோட்டலில் சாப்பிட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. 

Advertisement:
[X] Close