ஆசிரியர் பகவானுக்கு குவியும் பிரபலங்களின் பாராட்டு!!

  சுஜாதா   | Last Modified : 23 Jun, 2018 09:35 am

celebrities-appreciates-teacher-bhagavan

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராக இருக்கும் பகவான் பணியிடை மாற்றம் காரணமாக வேறு பள்ளி செல்ல இருந்தவரை,  வேறு பள்ளிக்கு மாற்றக்கூடாது என மாணவ மாணவிகள் பள்ளியை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். மாணவர்கள் - ஆசிரியர் இடையே நடந்த இந்த பாச போராட்ட காட்சிகள் பல்வேறு ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் வேகமாக பரவியது. ஆசிரியர் பகவானை கட்டிப்பிடித்து மாணவர்கள் அழுத விடீயோக்களை பார்த்த பிரபலங்கள் அவரை பாராட்டிவருகின்றனர். அந்த வகையில் இசை புயல் ரஹமான்,   நடிகர் ஹிருத்திக் ரோஷன், நடிகர் விவேக் தனது  ட்விட்டர்  பக்கங்களில் பாராட்டி உள்ளனர்.   

இந்த பாச போரட்ட செய்தியை பார்த்த இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தன்னுடைய ட்விட்டர்  பக்கத்தில், குரு-சிஷ்யர்கள் என்று பாராட்டி பூங்கொத்து படத்தை வைத்து வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் ட்விட்டர் பக்கத்தில், ஆசிரியருக்கும், மாணவர்களுக்கும் இடையே நடந்த இந்த பாசப்பிணைப்பு நிகழ்வு என் நெஞ்சை உருக்குகிறது, ஆசிரியர் பகவானுக்கு பாராட்டுகள் என்று பதிவிட்டு இருக்கிறார்.

நடிகர் விவேக் தனது  ட்விட்டர்  பதிவில், ‘ஒரு ஆசிரியரின் இடமாற்றம், மாணவர்களை கதறி அழ செய்திருக்கிறது. அப்படி என்றால் அவரது பண்பை நினைத்து பாருங்கள். அவருக்கு சிறந்த ஆசிரியருக்கான (நல்லாசிரியர்) ஜனாதிபதி விருது கிடைக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். பணிமாறுதலை 10 நாட்கள் நிறுத்தி வைக்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்து நடிகர் விவேக் மற்றொரு பதிவில், ‘சூப்பர். பள்ளிக்கல்வித்துறை மற்றும் அதன் அமைச்சருக்கும், உயர்கல்வி அதிகாரிகளுக்கும் நன்றியும் பாராட்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல சமூக வலைத்தளங்களில் அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Advertisement:
[X] Close