Breaking நிர்மலா தேவி விவகாரம்: குற்றப்பத்திரிக்கை தாக்கல்

  Newstm Desk   | Last Modified : 13 Jul, 2018 11:16 am

cbcid-files-chargesheet-against-nirmala-devi

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக கைதாகி உள்ள பேராசிரியை நிர்மலா தேவிக்கு எதிராக சிபிசிஐடி போலீசார் இன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.

அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளுடன் செல்போனில் பேசிய ஆடியோ ரிலீசாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்ததாக குற்றம் சாட்டப்பட்ட நிர்மலா தேவி, கடந்த ஏப்ரல் 17ம் தேதி வழக்குப்பதிவு செய்து காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவர் மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து  அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. 

அதையடுத்து, சென்னை மயிலாப்பூரில் உள்ள தடயவியல் ஆய்வுக்கூடத்தில் அவரின் குரல் மாதிரி பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கில், நிர்மலா தேவியின் வழக்கை 6 மாத காலத்திற்குள் முடிக்க வேண்டும் என கீழவை நீதிமன்றத்திற்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நேற்று உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் இந்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் இன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். 

Advertisement:
[X] Close