'10 லட்சம் வேணும்; என்னை சுடுங்கள்' தமிழக அரசை கிழித்த ஐடி ஊழியர்கள்

Last Modified : 24 May, 2018 07:16 pm


தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று சென்னையில் உள்ள சில ஐடி நிறுவன ஊழியர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். 

சென்னை செங்கல்பட்டு சாலையில் அமைந்துள்ள மஹிந்திரா சிட்டியில் உள்ள ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் சில ஊழியர்கள், இன்று மாலை ஸ்டெர்லை போராட்டத்தில் கலந்துகொண்டனர். காவல்துறையினர் தூத்துக்குடியில் நடத்திய துப்பாக்கிச் சூட்டிகிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழக அரசின் போக்கை கண்டித்தும் பல ஐடி ஊழியர்கள் போராட்டம் சாலையில் இறங்கி மனித சங்கிலி போராட்டம் செய்தனர். சாலையோரம் "10 லட்சம் வேணும். என்னையும் சுண்டுங்கள்" என பல பதாகைகளை ஏந்தி அவர்கள் நின்றனர். 

தூத்துக்குடியில் போராட்டக்காரர்கள் 13 பேரை போலீசார் சுட்டுக் கொன்ற சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் நூற்றுக்கணக்கான போராட்டங்கள் நடந்து வருகின்றன. நாளை முழு அடைப்பு போராட்டம் நடத்த பல்வேறு அமைப்புகள் முடிவெடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

..
Advertisement:
[X] Close