• இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஜீத் வடேகர் மரணம்
  • வாஜ்பாய் கவலைக்கிடம்... தலைவர்கள் எய்ம்ஸ் வருகை
  • பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது
  • நிலக்கரி இறக்குமதி முறைகெடு தொடர்பாக சி.பி.ஐ விசாரணை - ஸ்டாலின் வலியுறுத்தல்
  • மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1.30 லட்சம் கனஅடியாக உயர்வு

மாற்றுத்திறனாளி ஊழியர்கள் மாலையில் 15 நிமிடங்களுக்கு முன்பே வீட்டிற்கு புறப்படலாம்: தமிழக அரசு சலுகை

  சுஜாதா   | Last Modified : 11 Jun, 2018 05:04 am

tn-govt-reduced-the-office-timing-for-differently-abled

அரசு வேலையில் இருக்கும் மாற்று திறனாளி ஊழியர்கள், மாலையில் அலுவலகத்தில் இருந்து 15 நிமிடங்கள் முன்னதாகவே புறப்பட்டு வீட்டிற்கு செல்ல தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. 

இதுதொடர்பாக பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்த துறை தலைமைச் செயலாளர் எல்.கே.திரிபாதி வெளியிட்டுள்ள அறிக்கையில்  கூறியிருப்பதாவது:- மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை தொடர்பாக மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையரிடம் குறிப்புரை கேட்ட போது, பார்வையற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளி பணியாளர்கள் தினமும் மாலையில் 15 நிமிடங்கள் முன்னதாகச் வீட்டுக்கு செல்ல அனுமதி வழங்கலாம் என பரிந்துரை செய்தார்.

மாற்றுத்திறனாளிகளுக் கான ஆணையரின் கருத்துருவை அரசு பரிசீலனை செய்தது. அதன் அடிப்படையில் பார்வையற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்கள் தினமும் மாலையில் 15 நிமிடங்கள் முன்னதாக அலுவலகத்தை விட்டு செல்ல அனுமதி அளித்து ஆணையிடப்பட்டுள்ளது.

இந்த சலுகை குறித்து தலைமைச் செயலக அலுவலக நடைமுறை மற்றும் அரசு அலுவலக நடைமுறை நூல்களுக்கு தக்க திருத்தம் பின்னர் வெளியிடப்படும். இதுதொடர்பாக உத்தரவு நகல்கள் தலைமைச் செயலகத்தின் அனைத்து துறைச் செயலாளர்கள், துறை தலைவர்கள், அனைத்து மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட நீதிபதிகள், ஐகோர்ட்டு பதிவாளர், ஊனமுற்றோருக்கான மாநில ஆணையர், சமூக நலம் மற்றும் சத்துணவுத்துறை செயலாளர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செயலாளர் உள்ளிட்ட அனைத்து துறைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.    

Advertisement:
[X] Close