ஜெயலலிதா இடத்தில் மோடி - பழ.கருப்பையா சொல்கிறார்!

  ஐஸ்வர்யா   | Last Modified : 11 Jun, 2018 07:51 pm

modi-is-in-the-place-of-jayalalitha-says-pala-karuppiah

ஜெயலலிதா இடத்தில் தற்போது அ.தி.மு.க-வில் மோடி உள்ளதாகவும், அவர்தான் அந்த கட்சியை இயக்கிவருவதாகவும் பழ கருப்பையா தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் எம்.எல்.ஏ பழ கருப்பையா, "ஜெயலலிதா இடத்தில் தற்போது அ.தி.மு.க-வில் மோடி இருக்கிறார். அவர்தான் அந்த கட்சியை இயக்கி வருகிறார். போர்களத்திலேயே வளர்ந்தவர் கலைஞர். தற்போது அரசியலுக்கு வர நினைப்பவர்கள் மக்களின் நிலைமையையும், அவர்களின் உணர்வுகளையும் புரிந்துக் கொள்ள வேண்டும். தற்போது ஸ்டெர்லைட் ஆலை மூடல் என்பது நாடகம், இதேபோன்று ஜெயலலிதா ஆட்சியின் போதும், ஸ்டெர்லைட் ஆலை கண் துடைப்புக்காக மூடப்பட்டு பின் திறக்கப்பட்டது. அதேபோன்று தான் தற்போது எடப்பாடி செய்து வருகிறார். ஸ்டெர்லைட் பாதிப்பு குறித்து மக்கள் தெரிவித்தப்போது, அதை கேட்காமல் மக்களை ஒடுக்க நினைத்து இந்த எடப்பாடி அரசு அப்பாவி மக்களை சுட்டுக்கொன்றுள்ளது” என்றார்.

..
Advertisement:
[X] Close