• கர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு
  • வாஜ்பாய் உடலுக்கு ஆளுநர், இ.பி.எஸ், ஸ்டாலின் அஞ்சலி!
  • வாஜ்பாய் உடலுக்கு சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரனாப் அஞ்சலி!
  • முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்!
  • அமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்

தகுதி நீக்க வழக்கில் நல்லதே நடக்கும்: அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை

  Newstm Desk   | Last Modified : 14 Jun, 2018 12:31 pm

minister-jayakumar-says-we-are-expecting-postive-result-in-mlas-disqualification-case

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நல்லதே நடக்கும் என தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று பகல் 1 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்க இருக்கிறது. இதனால் தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சி கவிழுமா? நிலைக்குமா? என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. முன்னதாக தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும் என்று தினகரன் தரப்பு எம்.எல்.ஏ தங்கத்தமிழ்செல்வன் கூறியிருந்தார். 

இந்நிலையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார், "18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பு வருகிறது. நல்லதே நடக்கும் என்று நம்புகிறோம். 

நெடுஞ்சாலை துறையில் டெண்டர் விடும் பணியில் எந்தவித முறைகேடும் நடக்கவில்லை என்பதை உறுதியாக கூறுகிறேன். புகார் கொடுத்த ஸ்டாலின் இதில் தோற்றுத்தான் போவார். யார் வேண்டுமானாலும் புகார் அளிக்கலாம். ஆனால் முகாந்திரம் இருக்க வேண்டும். 

ஜாக்டோ ஜியோ ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற மனமிருக்கிறது. ஆனால் பணம் இல்லை என்ற நிலை தான் உள்ளது. அட்சயபாத்திரம் என்று ஒன்று இருந்தால் நாங்கள் அள்ளி அள்ளி கொடுப்போம். என்ன செய்வது? அரசின் வருவாயை கொண்டுதான் அனைத்தையும் செய்ய வேண்டியுள்ளது" என்றார். 

Advertisement:
[X] Close