• முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்!
  • அமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்
  • 5 மாவட்டங்களில் கனமழை - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • கூட்டத்தில் சிக்கிய ராகுல் : மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்
  • குற்றவாளிகளை தண்டிக்கவே சிலை கடத்தல் வழக்கு சிபிஐக்கு மாற்றம் - தமிழக அரசு

தீர்ப்பு ஊசிவெடியாக வெடித்துவிட்டது: தமிழிசை

  Newstm Desk   | Last Modified : 14 Jun, 2018 02:33 pm

tamilisai-says-about-mlas-disqualification-case

தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு ஊசிவெடி போன்று வெடித்துள்ளது என தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நீதிபதி சுந்தர் மற்றும் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி ஆகிய இருவரும் முரண்பட்ட தீர்ப்புகளை வாசித்ததால் வழக்கு 3வது நீதிபதிக்கு மாற்றப்பட்டுள்ளது. அவர் விசாரணை செய்து வழங்கும் தீர்ப்பின் அடிப்படையில் முடிவு தெரிய வரும். இதனால் தற்காலிகமாக எடப்பாடி பழனிசாமி அரசு தப்பித்துள்ளது. 

தீர்ப்பு குறித்து தமிழிசை கூறுகையில், "தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு ஒரு தீர்வில்லாமல் வந்திருக்கிறது. யாருக்கும் சாதகமும் இல்லை, பாதகமும் இல்லை. முன்னதாக தீர்ப்பு அணுகுண்டாகவும் வெடிக்கலாம், புஸ்வானமாகவும் மாறலாம் என்று கூறியிருந்தேன். இப்போது அணுகுண்டாகவும் இல்லாமல் புஸ்வானமாகவும் இல்லாமல் ஊசிவெடியாய் மாறி விட்டது. 

யார் கூறியது சரி என்று என்னால் கூற முடியாது. நான் ஒன்றும் சூப்பர் நீதிபதி இல்லை. இருவருமே அவரவருக்கு தீர்ப்பு சொல்லக்கூடிய அதிகாரம் உள்ளது. சொல்லியிருக்கிறார்கள். மேலும், நீதிமன்றத்தில் மிகப்பெரிய வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள், அவர்களிடம் சென்று கருத்து கேளுங்கள். டாக்டரிடம் எந்த டைக்னாசிஸ் சரி என்று கேட்டால் சொல்ல முடியும். நீதிபதிகள் கருத்து பற்றி கேட்டால் எப்படி கூற முடியும்?" என தெரிவித்தார்.

Advertisement:
[X] Close