மும்பை இந்தியன்ஸ்: பேட் கம்மின்ஸுக்கு பதில் ஆடம் மில்னே இணைப்பு
Author: Newstm Desk | Posted Date : 11:24 (16/04/2018) A+       A-

மும்பை இந்தியன்ஸ்: பேட் கம்மின்ஸுக்கு பதில் ஆடம் மில்னே இணைப்பு

Apr 16


பேட் கம்மின்ஸுக்கு பதிலாக நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆடம் மில்னே மும்பை இந்தியன்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த ஆஸ்திரேலியா பந்துவீச்சாளர் பேட் கம்மின்ஸ் முதுகு காயம் காரணமாக ஐ.பி.எல்-ல் இருந்து விலகி இருந்தார். இதனால் அவருக்கு பதில் நியூசிலாந்து பந்துவீச்சாளர் ஆடம் மில்னேவை மும்பை இந்தியன்ஸ் களமிறக்கியிருக்கிறது. 

நடந்து முடிந்த ஐ.பி.எல் ஏலத்தில் மில்னே ஏலம் போகவில்லை. அவரது அடிப்படை விலை ரூ.75 லட்சமாகும். கடந்த இரண்டு சீசன்களில் அவர் பெங்களூரு அணிக்காக விளையாடினர். ஐந்து ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடியுள்ள மில்னே, நான்கு விக்கெட் எடுத்துள்ளார். அவரது எகானமி ரேட் 9.8.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பிறகு காயத்தால் அவதிப்பட்டு வந்த பேட் கம்மின்ஸ் இந்தியாவுக்கு வரவில்லை. ஏப்ரல் 10ம் தேதி அவர் அதிகாரபூர்வமாக தான் விலகுவதாக அறிவித்தார்.

11-வது ஐ.பி.எல் போட்டி தொடங்கி ஒரு வாரம் முடிந்த நிலையில், நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் இதுவரை சந்தித்த மூன்று ஆட்டங்களிலும் தோல்வியை சந்தித்து புள்ளி பட்டியலில் கடைசியாக உள்ளது. நாளை (17ம் தேதி) தனது நான்காவது போட்டியில மும்பை அணி, பெங்களூருவை எதிர்கொள்கிறது.  


RELATED STORIES
MORE FROM sports