[X] Close

16-03-2019- தினப்பலன். இன்று இந்த ராசிக்காரர்களுக்கு பணம் சம்பாதிக்கும் திறமை அதிகமாகும்

கணித்தவர் :   பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

விளம்பி வருஷம் | தக்ஷிணாயணம் | சிசிரருது
16 March 2019 | பங்குனி - 02 | சனிக்கிழமை

தசமி இரவு 7.18   மணி பின்னர் ஏகாதசி 
புனர்பூசம் இரவு 10.17 மணி வரை பின் பூசம்
சித்த யோகம் | சோபனம் நாமயோகம் | தைதுலம் கரணம்

அஹஸ்: 29.52 | தியாஜ்ஜியம்: 11.26 | நேத்ரம்: 2 | ஜீவன்: 0    
மீன லக்ன இருப்பு (நா.வி) - 3.59
சூர்ய உதயம் - 6.24 | சூர்ய அஸ்தமனம் - 6.21

ராகு காலம்: காலை 9.00 - 10.30 | எமகண்டம்: மதியம் 1.30 - 3.00
குளிகை: காலை 6.00 - 7.30 | சூலம்: கிழக்கு 
பரிகாரம்: தயிர் 

குறிப்பு: இன்று சம நோக்கு நாள்.
திருப்புல்லாணி ஜெகந்நாதப் பெருமாள் பட்டாபிராமர் உபயகெருட ஸேவை.
மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் திருக்கல்யாண வைபவம்.
திரிசிராமலை தாயுமானவர் வெள்ளி விருஷப ஸேவை.

திதி: தசமி
சந்திராஷ்டமம்: மூலம், பூராடம்.

கிரகம்        பாத சாரம்                            நிலை

சூரியன்        பூரட்டாதி 4ம் பாதம்           நட்பு
சந்திரன்       மிதுனம்                                  நட்பு
செவ்வாய்   க்ருத்திகை 1ம் பாதம்         ஆட்சி
புதன்             சதயம் 3ம் பாதம்                 நட்பு
குரு               மூலம் 1ம் பாதம்                 ஆட்சி
சுக்கிரன்        திருவோணம் 4ம் பாதம்   நட்பு
சனி                பூராடம் 2ம் பாதம்               நட்பு
ராகு               புனர்பூசம் 3ம் பாதம்           நட்பு
கேது             உத்தராடம் 1ம் பாதம்         நட்பு

இன்று திருப்திகரமான பலனை எதிர்பார்க்கலாம். அலைச்சலும், பளுவும் இருக்கத்தான் செய்யும்.

அரசு உதவி கிடைக்கும். உடன் பணிபுரிவோரால் பாராட்டும்,

அங்கீகாரமும் கிடைக்கும். இரவு நீண்ட நேரம் முழிக்க வேண்டியதிருக்கும்.

மாணவர்களுக்கு இருசக்கர வாகனங்களை பயன்படுத்தும் போது கவனம் தேவை. பாடங்களை கவனமாக படிப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, வெளிர் சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6

இன்று சீரான பலனை காண்பீர்கள். பதவிகள் வந்து சேரும்.  

விடாமுயற்சியுடன் உழைப்பது நல்லது. அதிகமாக தூரம் செல்ல வேண்டியதிருக்கும்.

உடல் நலம் சிறப்பாக இருக்கும்.  தொடர்ந்து நற்பலனை பெறலாம்.

கெட்ட சகவாசத்தில் சற்று எச்சரிக்கை தேவை. குடும்பத்தில் இருப்பவர்களின் செய்கையால் மன உளைச்சல் ஏற்படலாம். 

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, பிரவுண்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

இன்று அதிகமாக சிரத்தை எடுத்து மேலிடத்திற்கு விஷயங்களை சொல்ல வேண்டியதிருக்கும்.

முன்னேற்றத்திற்கு வழி காண்பீர்கள். வீண் முயற்சிகளை தவிர்ப்பது நல்லது.

எதையும் ஆராய்ந்து முடிவுகளை எடுப்பது நல்லது.

வேகத்தை குறைத்து விவேகமுடன் செயல்படுவது நன்மை தரும்.

கணவன், மனைவிக்கிடையே வாக்கு வாதங்கள் உண்டாகாமல் தவிர்ப்பது நன்மை தரும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9

இன்று பணவரத்து தாமதப்படும். பெரியோர்களிடம் பகைமை பாராட்டுவதை தவிர்ப்பது நல்லது.

தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் தாமதப்படும்.

பழைய பாக்கிகள் வசூலாவதில் மெத்தனம் காணப்படும்.

எந்த ஒரு வேலையையும் அலைந்து செய்து முடிக்க வேண்டி இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9
 

இன்று பங்குதாரர்களிடம் யதார்த்த நிலையை கடைபிடிக்கவும்.

எந்தவொரு விஷயத்திலும் ஆராய்ந்து முடிவெடுக்கவும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமுடன் பணியாற்றுவது நல்லது.  

புதிய வேலைக்கு செய்யும் முயற்சிகள் பலன் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். மிக கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெண்மை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5

இன்று இரவு நீண்ட நேரம் விழித்திருக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.

குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்க வேண்டிய சூழ்நிலை வரலாம்.

வெளியூர் சென்று தங்கியிருந்து வேலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்.

குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை இருந்து வரும்.

கணவன், மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் குறையும்.

குழந்தைகளின் எதிர்கால நலனில் அக்கறை காட்டுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

இன்று பணம் சம்பாதிக்கும்  திறமை அதிகமாகும்.

தடைபட்டு வந்த காரியங்கள் அனைத்தும் சாதகமாக நடந்து முடியும்.

எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் போட்டிகளை சந்திக்க வேண்டி இருக்கும்.

பெண்கள் எந்த ஒரு காரியத்தையும் செய்யும் முன் தீர ஆலோசனை செய்வது நல்லது. எதிலும் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

இன்று தொழில் வியாபாரத்தில் கூட்டுத் தொழில் செய்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

ஆவணங்கள் அனைத்தையும் ஒரு முறைக்கு இருமுறை வாசித்து வைத்துக் கொள்வது நல்லது.

மாணவர்கள் மிகவும் கவனமாக பாடங்களை படிப்பது அவசியம்.

வீண் விவகாரங்களை விட்டு விலகுவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 6

இன்று தொழிலில் போட்டிகள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும்.

பணியாட்கள் மூலம் நன்மை ஏற்படும்.

சாமர்த்தியமான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களிடம் நன் மதிப்பை பெறுவீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் நேர்மையாக சிறப்பாக பணிகளை செய்து மேல் அதிகாரிகளிடம் பாராட்டுக்கள் கிடைக்க பெறுவார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ப்ரவுண்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9

இன்று உயர் பதவிகள் கிடைக்க கூடும். இருப்பினும் அதிக முயற்சிகள் எடுக்க வேண்டியதிருக்கும்.

அதீத உழைப்பு செய்ய வேண்டியதிருக்கும். சக ஊழியர்களுடன் கருத்து வேற்றுமை வரலாம்.

எதிலும் கருத்து சொல்லும் முன் யோசித்து சொல்வது சிறப்பு. குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும்.

பிரிந்து சென்ற குடும்ப உறுப்பினர் மீண்டும் வந்து சேரலாம்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 7

இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முக்கிய பொறுப்பு கிடைக்கலாம்.

செயல்திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்க வழிவகை நடக்கும்.

எல்லா வகையிலும் நன்மை ஏற்படும்.

கணவன், மனைவிக்கிடையே இருந்த மன வருத்தம் நீங்கி மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 9

இன்று பிள்ளைகள் நீங்கள் கூறியதை கேட்டு அதன்படி நடப்பது ஆறுதலை தரும்.

உறவினர்கள் நண்பர்கள் வருகை என இருக்கும்.  குல தெய்வ வழிபாடு செய்வீர்கள்.

தேவையான உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும்.

தடைபட்ட காரியங்கள் சாதகமாக முடியும். பணவரத்து அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
[X] Close
<

ராசி பலன்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள newsTM APP - டவுன்லோட் செய்யவும்