மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் 7, 8 விற்பனை நிறுத்தம்

  mayuran   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
விண்டோஸ் 7 மற்றும் 8 இயங்குதளத்தின் விற்பனையை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் நிறுத்தியுள்ளது. இதன்மூலம் விண்டோஸ் 10 இயங்குதளத்தின் விற்பனையை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது. மைக்ரோசாஃப்ட் நிறுவனம் டெல், டோஷிபா போன்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு, அவர்கள் விற்கும் புதிய கணினிகளில் விண்டோஸ் 7 மற்றும் 8 இயங்குதளங்களை நிறுவி விற்று வந்தது. இனி அதற்குப் பதிலாக, விண்டோஸ் 10 இயங்குதளம் மட்டுமே விற்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. விற்பனை தான் நிறுத்தப்பட்டுள்ளதே தவிர, விண்டோஸ் 7 இயங்குதளத்திற்கு 2020 ஆம் ஆண்டு வரையும், விண்டோஸ் 8.1 இயங்குதளத்திற்கு 2023 வரையும் சேவை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close