இனி பேஸ்புக்கிலும் வேலை தேடலாம்

Last Modified : 08 Nov, 2016 11:06 am
LinkedIn இணையதளத்தை போல் பேஸ்புக்கும் இணையம் வாயிலாக வேலைவாய்ப்பு சேவையை வழங்க உள்ளது. இதற்காக பேஸ்புக்கில் உள்ள தொழில் நிறுவனங்களின் பக்கங்களின் அட்மின்களிடம் வேலைவாய்ப்பு குறித்த தகவல்களை பதிவிடவும் மற்றும் விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளவும் பேஸ்புக் கேட்டுக் கொண்டுள்ளது. இந்த சோதனை முயற்சியின் அடிப்படையில் வேலைவாய்ப்பு சேவையை பேஸ்புக்கில் துவங்க உள்ளதாக அந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். முன்னதாக பொருட்களை வாங்க மற்றும் விற்பனை செய்யும் வகையில் Marketplace எனும் வசதியை பேஸ்புக்கில் அறிமுகப்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close