சரிந்த பங்குச்சந்தை... உயர்ந்த தங்கம்

Last Modified : 01 Jan, 1970 05:30 am

கருப்பு பணத்தை அழிக்கும் நோக்கில் மத்திய அரசு இன்று முதல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லுபடியாகாது என அறிவித்திருந்தது. இதன் தாக்கம் இன்று இந்திய பங்கு சந்தையில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. பெரும்பாலானோர் தங்கத்தில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டியதால் இந்திய பங்கு சந்தைகள் சரிவை கண்டன. தற்போதைய நிலவரப்படி மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் 500 புள்ளிகள் சரிந்து 27,092 ரூபாய்க்கும், தேசிய குறியீட்டு எண் 186 புள்ளிகள் சரிந்து 8,357 ரூபாய்க்கும் வர்த்தகமானது. சென்னையில் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.1,456 உயர்ந்து ரூ.24,480-க்கு விற்பனையாகிறது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close