ரூ.10,790 விலையில் ZOPO கலர் F2 ஸ்மார்ட்போன்

  mayuran   | Last Modified : 10 Nov, 2016 05:30 pm

ZOPO நிறுவனம் அதன் புதிய கலர் F2 என்ற ஸ்மார்ட்போனை இந்தியாவில் ரூ.10,790 விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் மிகப்பெரிய சிறப்பம்சமாக, இதில் மல்டி ஃபங்ஷன் கைரேகை ஸ்கேனர் உள்ளடக்கி இருக்கிறது. இந்த போன் வெள்ளை, தங்கம் மற்றும் கருப்பு வண்ண வகைகளில் வெளிவந்துள்ளது. ZOPO F2 ஸ்மார்ட்போனில் 720x1280 பிக்சல்களை கொண்ட 5.5 inch HD IPS டிஸ்ப்ளே உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 2GB Ram உடன் இணைந்து 64-bit MediaTek quad-core ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. முன் பக்க கேமரா 8 மெகாபிக்சலையும் பின் பக்க கேமரா 5 மெகாபிக்சலையும் கொண்டுள்ளது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close