இரு ரகங்களில் வெளிவந்துள்ள ZenFone 3 Max

Last Modified : 01 Jan, 1970 05:30 am

Asus நிறுவனம் புதிதாக ZC520TL மற்றும் ZC553KL எனும் இரு ZenFone 3 Max ரக மொபைல்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது. 4ஜி ரக போன்களான இவை இரண்டிலும் ZenUI 3.0 உடன் கூடிய ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ இயங்குதளம், ஹைபிரிட் டூயல் சிம், 4100mAh பேட்டரி, பிங்கர் பிரிண்ட் சென்சார் போன்ற பொதுவான அம்சங்கள் உள்ளன. 12,999 ரூபாய் விலையுள்ள ZenFone 3 Max ZC520TL-ல் 5.2 இன்ச் தொடுதிரை, 1.25GHz quad-core MediaTek MT6737T SoC உடன் 3ஜிபி RAM, 32ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 32ஜிபி எக்ஸ்டெர்னல் ஸ்டோரேஜ், 13MP ரியர் கேமரா, 5MP ப்ரண்ட் கேமரா, 4G LTE, Wi-Fi 802.11 b/g/n, GPS, Bluetooth v4.0, Micro-USB, FM radio போன்றவை உள்ளன. ZenFone 3 Max ZC553KL-ல் 5.5 இன்ச் தொடுதிரை, 1.4GHz octa-core Qualcomm Snapdragon 430 SoC 3ஜிபி RAM, 32ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 128ஜிபி எக்ஸ்டெர்னல் ஸ்டோரேஜ், 16MP ரியர் கேமரா, 8MP ப்ரண்ட் கேமரா, 4G LTE, Wi-Fi 802.11 b/g/n, GPS, Bluetooth v4.1, Micro-USB, FM radio போன்றவை உள்ளன. இதன் விலை 17,999 ரூபாயாகும். Glacier Silver, Sand Gold, மற்றும் Titanium Gray வண்ணங்களில் இந்த இரண்டு மொபைல்களும் வெளி வந்துள்ளன.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.