ரிலையன்ஸ் அறிமுகப்படுத்தி உள்ள ஆல்-இன்-ஒன் செயலி "Chillx"

Last Modified : 01 Jan, 1970 05:30 am

ரிலையன்ஸ் நிறுவனம் புதிதாக Chillx எனும் புதிய ஆல்-இன்-ஒன் செயலியை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த செயலி மூலம் ஒரே இடத்தில் பாடல், வீடியோ, ஆப்கள், குறும்படங்கள், திரைப்படங்கள் மற்றும் கேம்ஸ் போன்றவற்றை பெற முடியும். இவை இலவசமாகவும் மற்றும் கட்டணம் செலுத்தும் முறையிலும் கிடைக்கும். ஆங்கிலம் தவிர்த்து தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் பெங்காலி உள்ளிட்ட பிராந்திய மொழிகளையும் இந்த செயலி கொண்டுள்ளது. குறைந்தபட்சமாக 49 ரூபாயில் இருந்து இதில் திட்டங்கள் ஆரம்பிக்கின்றன. இதில் பேஸ்புக், கூகுள் கணக்குகள் தவிர்த்து போன் நம்பர் மூலமாகவும் லாகின் செய்யலாம். வீடியோக்களை நமது வசதிக்கு ஏற்ற தரத்தில் மாற்றி கொள்ளும் வசதியும், டவுன்லோடிங் மற்றும் ஆப்லைனில் பார்க்கும் வசதியும் உள்ளது. கேம்ஸை பணம் கொடுத்து வாங்கும் முன்னரே விளையாடி பார்க்கும் வசதியும் கொண்டுள்ளது. மேலும் Chillx-ல் உள்ள தகவல்களை பேஸ்புக், வாட்ஸ் ஆப் போன்றவற்றிலும் பகிர்ந்து கொள்ள முடியும். ஆண்ட்ராய்டு போன்களுக்காக பிரேத்யேகமாக உருவாக்கப்பட்ட இந்த செயலியை Google Play-ல் இருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close