OnePlus 3-ன் அப்டேட்டட் வெர்ஷன் OnePlus 3T அறிமுகம் (வீடியோ)

Last Modified : 01 Jan, 1970 05:30 am

ஒன்பிளஸ் நிறுவனம் OnePlus 3 மாடல் மொபைலின் அப்டேட்டட் வெர்ஷனான OnePlus 3T மொபைலை நேற்று அறிமுகப்படுத்தியது. 64 ஜிபி மற்றும் 128 ஜிபி என இரு ஸ்டோரேஜ் அளவுகளில் வெளிவந்துள்ள இதில் 5.50 இன்ச் தொடுதிரை, ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ இயங்குதளம்(நௌகட் அப்டேட் உண்டு), 6 ஜிபி RAM, 16 மெகா பிக்சல் திறன் கொண்ட முன் மற்றும் பின் பக்க கேமரா, Qualcomm Snapdragon 821 SoC, 3400mAh பேட்டரி போன்றவை உள்ளன. மேலும் 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth 4.2, NFC, ஜிபிஎஸ் உடன் பிங்கர் பிரிண்ட் சென்சார் போன்ற அம்சங்களும் உள்ளன. இதன் இந்திய வரவு பற்றி எந்த தகவலும் இல்லை.

Advertisement:
[X] Close