4 இந்திய மொழிகளில் பிபிசி செய்திகள்!

  mayuran   | Last Modified : 17 Nov, 2016 09:23 pm
இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் பிபிசி செய்தி நிறுவனம் தெலுங்கு, குஜராத்தி, மராத்தி, பஞ்சாபி ஆகிய 4 இந்திய மொழிகள் உள்பட 11 புதிய மொழிகளில் வானொலி மற்றும் வலைதளச் சேவைகளைத் தொடங்குகிறது. இங்கிலாந்து அரசு இதற்கு நிதியுதவி வழங்கியதாகவும் இதன்மூலம் இந்தியாவில் 157 புதிய வேலைகள் உருவாகும் என்றும் BBC கூறியுள்ளது. இங்கிலாந்துக்கு வெளியே பிபிசியின் மிகப்பெரிய மையமாக டெல்லி உருவெடுக்கும் என்றும் தெரிவித்துள்ளது. தற்போது 29 மொழிகளில் BBC செய்திகள் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close