"ரிலையன்ஸ் குளோபல் கால்" - இனி வெளிநாடுகளுக்கும் எளிதில் பேசலாம்

Last Modified : 01 Jan, 1970 05:30 am

ரிலையன்ஸ் நிறுவனம் சர்வதேச போன் அழைப்புகளுக்காக ரிலையன்ஸ் குளோபல் கால் எனும் செயலியை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த செயலி மூலம் பின் நம்பர் அல்லது டோல் ப்ரீ நம்பர் இன்றி வெளிநாடுகளில் இருப்பவர்களுடன் வாய்ஸ் கால் மூலம் பேச முடியும். இந்த செயலி மூலம் இந்தியாவில் இருந்து அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட உலகம் முழுதும் உள்ள 200 நாடுகளுக்கு பேசலாம். இந்தியாவில் உள்ள அனைத்து முன்னனி நிறுவனங்களின் சிம் கார்டுகளை உபயோகிப்பவர்களும் இந்த செயலியை பயன்படுத்தலாம். முதலில் ரிலையன்ஸின் இணையத்தளத்தில் இதற்காக ரெஜிஸ்டர் செய்த பின்பு ப்ளே ஸ்டார் அல்லது ஆப்பிள் ஸ்டோரில் இருந்து இந்த செயலியை டவுன்லோட் செய்து கொள்ளலாம். அறிமுக சலுகையாக சைன்-அப் செய்யும் போது 100 ரூபாய் செலுத்தி 200 ரூபாய்க்கான டாக் டைமை பெற்றுக் கொள்ளலாம். இந்த செயலியில் ஒரு நிமிடத்திற்கு 1.4 ரூபாய் என்ற வீதத்தில் சர்வதேச அழைப்புகளை பேசலாம்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close