'மேக் இன் இந்தியா' திட்டத்தை குறிவைக்கும் ப்ளிப்கார்ட்

  shriram   | Last Modified : 21 Nov, 2016 09:14 am

மத்திய அரசின் 'மேக் இன் இந்தியா' திட்டத்தை உபயோகப்படுத்தி தனது பெயரில் இந்தியாவிலேயே பொருட்களை தயாரிக்கும் புதிய திட்டத்தை ப்ளிப்கார்ட் நிறுவனம் ஆலோசித்து வருகிறது. இதன்படி இயக்குனர் சச்சின் பன்சால் ஒரு புதிய குழுவை உருவாக்கி இந்தியாவில் எலெக்ட்ரானிக்ஸ் முதல் துணிமணிகள் வரை இந்தியாவில் தயாரிக்க திட்டமிட்டு வருகிறாராம். இதன் மூலம் மத்திய அரசை கவர்ந்து மானியம் பெறுவதற்கு ப்ளிப்கார்ட் திட்டமிட்டு வருகிறது என்று விஷயம் தெரிந்தவர்கள் கூறுகின்றனர். சர்வதேச நிறுவனமான அமேசானுடன் கடும் போட்டியில் உள்ள ப்ளிப்கார்டுக்கு இது விளம்பரத்திலும் பெரிதாக உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செய்தியை அந்நிறுவனத்தை சேர்ந்த சிலர் உறுதி செய்தாலும் தற்போதைக்கு இந்த திட்டத்திற்காக எந்த ஒரு காலக்கெடுவும் விதிக்கவில்லை என்கின்றனர்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close