பேஸ்புக் பிரச்சனைக்கு 36 மணி நேரத்தில் தீர்வு கண்ட மாணவர்கள்

Last Modified : 01 Jan, 1970 05:30 am

உலகையே ஆட்டுவிக்கும் சமூக வலைத்தளமான பேஸ்புக்கிற்கு புதிய பிரச்சனை ஒன்று முளைத்துள்ளது. நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலின் போது பேஸ்புக்கில் டிரம்ப் மற்றும் ஹிலாரி பற்றி உண்மைக்கு புறம்பான பதிவுகள் பல பேஸ்புக்கில் பகிரப்பட்டன. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில் இது போன்ற பதிவுகளை கட்டுப்படுத்துவது எப்படி என தெரியாமல் மார்க் விழி பிதுங்கி போயிருக்கிறாராம். இந்நிலையில் Anant Goel, Nabanita De, Qinglin Chen மற்றும் Mark Craft எனும் கல்லூரி மாணவர்கள் 4 பேர் இந்த பிரச்சனைக்கு தீர்வு கண்டுபிடித்துள்ளனர். அதுவும் வெறும் ஒன்றரை நாளில் இதனை கண்டுபிடித்துள்ளனர். இவர்கள் கண்டுபிடித்துள்ள Chrome browser extension லிங்கை பேஸ்புக்குடன் டேக் செய்து விட்டால் நியூஸ் பீடில் வரும் தகவல்களை ஆராய்ந்து அவற்றை உண்மையானவையா என்பதை காட்டும். இதனை பதிவுகளின் வலது மேற்புறத்தில் வெரிபைட் அல்லது நாட் வெரிபைட் என நீலநிற அடையாள குறியீட்டின் மூலம் கண்டு கொள்ளலாம். இந்த முறைக்கு BiF என அவர்கள் பெயரிட்டுள்ளனர். ஆனால் இந்த முறையை பயன்படுத்துவதை குறித்து பேஸ்புக் நிறுவனம் தான் இறுதி முடிவு செய்ய வேண்டும்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.