"புக் மை சோட்டூ" - ஏடிஎம் வாசல்களில் உங்கள் நேரம் வீணாவதை தடுக்க!

Last Modified : 01 Jan, 1970 05:30 am
செல்லா நோட்டு அறிவிப்பால் நாடு முழுவதும் பண தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. வங்கிகளிலும் எடிஎம்-களிலும் நீண்ட நேரம் வரிசையில் நின்று மக்கள் பணம் எடுத்து செல்கின்றனர். இதனால் நேரம் விரயம் ஆவதோடு வேலைக்கு செல்பவர்களுக்கும் பிரச்சனையாக உள்ளது. இதனை மனதில் வைத்து இந்தியாவை சேர்ந்த "புக் மை சோட்டூ" எனும் நிறுவனம் புதிய சேவை ஒன்றை ஆரம்பித்துள்ளது. இதன் படி நமக்கு பதிலாக ஒருவர் வங்கி மற்றும் ஏடிஎம் வரிசைகளில் நிற்பார்கள் நமது முறை வந்ததும் அவரை அனுப்பி விட்டு நாம் சென்று பணம் எடுத்துக் கொள்ளலாம். இச்சேவைக்கு ஒரு மணி நேரத்திற்கு 90 ரூபாய் வசூலிக்கப் படுகிறது. தற்போது உ.பி., ஹரியானா மற்றும் டெல்லி போன்ற மாநிலங்களில் மட்டுமே இச்சேவை அளிக்கப் பட்டு வருகிறது. இச்சேவையை பெற Bookmychotu.com என்ற இணையத்தளத்திலோ அல்லது +91-8587028869 என்ற எண்ணுக்கோ கால் செய்து ரெஜிஸ்டர் செய்து கொள்ள வேண்டும். கன்பர்மேஷன் மெசேஜ் வந்ததும் நாம் பணம் எடுக்க போகும் வங்கி அல்லது ஏடிஎம் குறித்த தகவலை உதவிக்கு வரும் நபரிடம் தெரிவித்தால் போதும் நமக்கு பதிலாக அவர் அங்கு காத்து இருப்பார். ஆனால் உதவிக்கு வரும் நபர் வங்கிக்குள் செல்லமாட்டார் வரிசையில் மட்டுமே நிற்பார் என்பது குறிப்பிடத்தக்கது. இது மட்டுமல்லாது வீடு மற்றும் கடை மாற்றும் போது, பார்ட்டி மற்றும் ஷாப்பிங் போன்றவற்றின் போதும் உதவிக்கு இச்சேவை வழங்கப்படுகிறது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close