வருகிறது ஏர்டெல் வங்கி!!

  shriram   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
ஏர்டெல் நிறுவனம் புதிதாக ஏர்டெல் பேமென்ட் வங்கிகளின் மூலம் தனது சேவையை விரிவுபடுத்துகிறது. நாடு முழுக்க இந்த சேவையை தொடங்கும் முன் முதலில் ராஜஸ்தானில் அறிமுகப்படுத்தி இதன் தொழில்நுட்பங்களை சோதனை செய்கிறது. தற்போது ராஜஸ்தானில் உள்ள 10,000 ஏர்டெல் மையங்களில் வாடிக்கையாளர்கள் வங்கி கணக்கை துவக்கலாம். இந்த வருட இறுதியில் ராஜஸ்தானில் 1 லட்சம் மையங்களில் அடிப்படை வங்கி சேவைகளை பயன்படுத்த வசதி செய்யப்படும் என ஏர்டெல் கூறியுள்ளது. நாடு முழுவதும் உள்ள 15 லட்சத்திற்கும் மேற்பட்ட ஏர்டெல் மையங்களின் மூலம் இந்த வங்கி சேவையை கிராமங்களுக்கும் விரிவுபடுத்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. வங்கி கணக்கை துவக்க ஆதார் அடையாள அட்டை மட்டும் போதுமானது. உங்கள் ஏர்டெல் மொபைல் நம்பரே அக்கவுண்ட் நம்பராக எடுத்துக் கொள்ளப்படும். மற்ற நெட்வார்ட் வாடிக்கையாளர்களும் அக்கவுண்ட் திறக்கலாம். இந்த வங்கி கணக்கின் மூலம் நாடு முழுவதும் உள்ள எல்லா வங்கிகளுக்கும் பணம் அனுப்பலாம். வருடத்திற்கு 7.5% சேமிப்பு கணக்குகளுக்கு வட்டியாக கொடுக்கப்படும். 1 லட்சம் ரூபாய் வரை ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் விபத்து காப்பீடு வழங்கப்படும். தற்போதைக்கு டெபிட் கிரெடிட் கார்டு திட்டங்கள் இல்லை. ஆனால், எந்த ஏர்டெல் மையத்திற்கும் சென்று பணத்தை டெபாசிட் செய்யவும் எடுக்கவும் வசதி செய்யப்படும்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close