இனி டவுன்லோடாகும் முன்னரே வாட்ஸ்அப் வீடியோக்களை பார்க்கலாம்

Last Modified : 24 Nov, 2016 03:54 pm

வீடியோ காலிங் வசதியை தொடர்ந்து புதிதாக மற்றொரு வசதியை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தி உள்ளது. இதுநாள் வரை வாட்ஸ் அப்பில் வரும் வீடியோக்களை தரவிறக்கம் செய்த பின்னரே பார்க்க முடியும். ஆனால் இனி முதல் வீடியோவை டவுன்லோட் செய்து கொண்டிருக்கும் போதே ஸ்ட்ரீமிங் செய்ய முடியும். இதற்காக டவுன்லோட் குறியீட்டிற்கு பதிலாக வீடியோவை ப்ளே செய்வதற்கான குறியீடு இருக்கும் இதன் மூலம் வீடியோவை டவுன்லோட் செய்வதற்கு முன்பே பார்க்கலாம். தற்போது சோதனைக்காக பீட்டா பயனாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் இந்த சேவை விரைவில் அனைவருக்கும் கிடைக்கும்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close