கண்ணாடியிலேயே உருவாகும் ஐபோன் 8!

  shriram   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பான ஐபோன் 8ன் வெளிப்பக்கம் முழுவதுமாக கண்ணாடியில் தயாரிக்கப்பட உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. 2017ஆம் ஆண்டு விற்பனைக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ள இந்த போனில் வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்பமும் டூயல் லென்ஸ் கொண்ட நவீன கேமராவும் இருக்கும் என கூறுகின்றனர். வெளியாகி இரு மாதங்களே ஆன நிலையில் உலகெங்கும் ஆப்பிள் நிறுவனத்தின் லேட்டஸ்ட் தயாரிப்பான ஐபோன் 7 மற்றும் 7 ப்ளஸ் போன்கள் பெரும் வரவேற்பை பெற்று விற்பனையில் சாதனை படைத்து வருகிறன்றன. அதற்குள் ஐபோன் 8ல் ஆப்பிள் நிறுவனம் புதிதாக கொண்டுவரவுள்ள தொழில்நுட்பங்கள் பற்றி இப்போதே டெக் வட்டாரங்கள் கிசுகிசுக்க ஆரம்பித்துவிட்டன. கே.ஜி.ஐ செக்யூரிட்டிஸ் நிறுவனத்தின் ஆய்வாளர் மிங் சி-குவோ வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்பத்தை சிறப்பாக அளிக்க போனின் வெளிப்பக்கம் முழுவதும் கண்ணாடியால் செய்ய ஆப்பிள் திட்டமிட்டுள்ளது. OLED தொழில்நுட்பத்தால் ஆன 4.7 மற்றும் 5.5 இன்ச் இருவகை டிஸ்பிளேக்களின் ஓரங்களில் இடைவெளி இல்லாமல் சாம்சங்கின் எட்ஜ் வகை போன்களை போல வடிவமைக்கின்றனராம்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close