DTH-ல் கால் பதிக்கும் ஜியோ!

Last Modified : 28 Nov, 2016 05:52 pm

ஜியோ சிம் சேவையை தொடர்ந்து அடுத்த கட்டமாக ஜியோ செட் ஆப் பாக்ஸ்(Jio STB) சேவை மூலம் DTH துறையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் காலடி எடுத்து வைக்க உள்ளது. இந்தியாவில் முதல் முறையாக தொலைக்காட்சியில் ஆண்ட்ராய்டை அடிப்படையாக கொண்ட சேவைகளை வழங்க உள்ளது. ஆண்ட்ராய்டை அடிப்படையாக கொண்ட செட் ஆப் பாக்ஸில் கூகுள் ப்ளே ஸ்டோர், கேம்ஸ் மற்றும் செயலிகள் போன்றவை அடங்கி இருக்கும். 300 க்கும் அதிகமான சேனல்களை கொண்ட லைவ் டிவி மற்றும் ப்ராட்பேண்ட் சேவை ஜியோ செட் ஆப் பாக்ஸ் மூலம் கிடைக்கும். ‘catch up’ அம்சம் மூலம் கடந்த 7 நாட்களில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளை மீண்டும் கண்டுகளிக்கலாம். மேலும் Jio STB மூலம் ஒரு டிவைஸில் ஒளிபரப்பாகும் வீடியோவை இடையில் நிறுத்தி விட்டு அதே தகவலை வைத்து மற்றொரு டிவைஸில் இருந்தும் அந்த வீடியோவை பார்க்கலாம். இச்சேவை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த மாதம் 15-ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close