வோடாஃபோனின் புதிய அசத்தலான டேட்டா பேக் - தமிழ்நாட்டிற்கு மட்டும்

Last Modified : 01 Jan, 1970 05:30 am

வோடாஃபோன் நிறுவனம் 3 புதிய 3ஜி இன்டர்நெட் பேக்குகளை ப்ரீபெய்ட் பயனாளர்களுக்காக அறிமுகப்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள வாடிக்கையாளர்களுக்காக பிரேத்யேகமாக அறிமுகப்படுத்தப் பட்டுள்ள இந்த ஆப்பரில் இரண்டு 6 மாத டேட்டா பேக் மற்றும் 1 ஒருவருட டேட்டா பேக் அடங்கும். 1,501 ரூபாய் விலையுள்ள ஒரு வருட டேட்டா பேக்கில் 15ஜிபி இன்ஸ்டன்ட் டேட்டாவும் பின்னர் ஒவ்வொரு மாதமும் சிறப்பு சலுகை விலையில் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட 1ஜிபி (ரூ.53), 2ஜிபி (ரூ.103),5GB (ரூ.256) டேட்டா பேக்குகள் கிடைக்கும். இதேபோல் 748 ரூபாய் விலையுள்ள 6 மாத டேட்டா பேக்கில் 3ஜிபி இன்ஸ்டன்ட் டேட்டாவும், பின்னர் சலுகை விலையில் 6 மாத காலத்திற்கு மாதம் தோறும் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட 1ஜிபி(ரூ.106) டேட்டாவும் கிடைக்கும். 494 ரூபாய் விலையுள்ள மற்றொரு 6 மாத வேலிடிட்டி கொண்ட இன்டர்நெட் பேக்கில் 2ஜிபி இன்ஸ்டன்ட் டேட்டாவும் பின்னர் 122 ரூபாய் சலுகை விலையில் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட 1ஜிபி டேட்டாவும் மாதம் தோறும் 6 மாத காலத்திற்கு கிடைக்கும்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close