சாம்சங்கை பின்னுக்கு தள்ளியது ஹுவேய்

  shriram   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

சீனாவின் ஹுவேய் நிறுவனம் மொபைல் விற்பனை லாபத்தில் கொரியாவின் பிரபல சாம்சங்கை முதல்முறையாக பின்னுக்கு தள்ளி இருக்கிறது. 2016 ஆம் நிதி ஆண்டின் முன்றாவது கால் பகுதியில் ஸ்மார்ட் போன் நிறுவனங்களின் லாபத்தில் வழக்கம்போல ஆப்பிள் நிறுவனம் 91 சதவீதத்துடன் முதல் இடத்தில் உள்ளது. புதிய ஐபோன் வெளியானது அதன் லாபத்தை கணிசமாக உயர்த்தியுள்ளது. சீனாவின் ஹுவேய் 2.4% லாபத்துடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. சீன நிறுவனங்கள் விவோ மற்றும் ஓப்போ 2.2 புள்ளிககுடன் 3வது, 4வது இடத்தை பிடித்தன. அதிகமான போன்கள் விற்பனை செய்தாலும் சாம்சங் நிறுவனத்தின் முக்கிய படைப்பான 'கேலக்சி 7 நோட்' பேட்டரி கோளாறால் வெடித்ததில் ஏற்பட்ட நஷ்டம், போன்களை திரும்ப பெற்ற செலவு போன்றவற்றால் அந்நிறுவனம் 9வது இடத்தில் உள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close