83 நாட்களில் 5 கோடி வாடிக்கையாளர்களை பெற்றது ஜியோ

  mayuran   | Last Modified : 29 Nov, 2016 07:24 pm

ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ சிம் கார்டுகள் கடந்த 83 நாட்களில் 5 கோடி வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. ஏர்டெல் 12 வருடங்களிலும் வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் 13 ஆண்டுகளிலும் பெற்றுள்ள வாடிக்கையாளர்களை 83 நாட்களில் ஜியோ முறியடித்துள்ளது. தற்போது அதிகளவான வாடிக்கையாளர்களை கொண்ட மொபைல் நெட்வொர்க் வரிசையில் ஜியோ முதலிடம் பெற்றுள்ளது. இது குறித்து ரிலையன்ஸ் நிறுவனத்தலைவர் முகேஷ் அம்பானி, 10 கோடி வாடிக்கையாளர்களை பெறுவதே எமது நோக்கம் என தெரிவித்தார். டிசம்பர் 31 ஆம் தேதியுடன் ஜியோவின் இலவச சேவை முற்றுப் பெறுவது குறிப்பிடத்தக்கது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close