மூன்று சிம்களுடன் உதயமாகும் Coolpad போன்கள்

  mayuran   | Last Modified : 30 Nov, 2016 03:42 pm

ஸ்மார்ட் போன்களில் இரட்டை சிம் புரட்சியில் இருந்து ஒரே போனில் மூன்று சிம் பயன்படுத்தும் விதமாக CoolPad மொபைல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. Coolpad Mega 3 (ரூ.6999) மற்றும் Coolpad Note 3S (ரூ.9999) இரண்டு விதமான போன்களிலும் மூன்று சிம் பயன்பாடு கொடுக்கப்பட்டுள்ளது. Coolpad Mega 3 யில் 5.5 இஞ்ச் எச்டி டிஸ்ப்ளேயுடன் 1.25GHz MediaTek MT6737 quad-core புரோசசர், 2GB RAM 16GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் 64GB வரை ஸ்டோரேஜ் நீட்டிக்கக் கூடிய வசதியும் உள்ளது. இதில் ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ இயங்குதளம் 3050mAh பேட்டரி, முன் மற்றும் பின் பக்க கேமரா 8 மெகாபிக்சலையும் கொண்டுள்ளது. Coolpad Note 3S ல் 5.5 இஞ்ச் எச்டி டிஸ்ப்ளே, 1.3GHz Qualcomm Snapdragon 415 MSM8929 octa-core புரோசசர், 3GB RAM 32GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் 32GB வரை ஸ்டோரேஜ் நீட்டிக்க முடியும். இதில் ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ இயங்குதளம் 2500mAh பேட்டரி, பின் பக்க கேமரா 13 மெகாபிக்சலும் முன் பக்க கேமரா 5 மெகாபிக்சலையும் கொண்டுள்ளது. இந்த இரு ஸ்மார்ட் போன்களும் டிசம்பர் 7 ஆம் தேதி முதல் அமேசான் இந்தியா இணையதளத்தில் விற்பனைக்கு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close