மேலும் 3 மாதங்கள்!!! ஜியோவின் 'ஹேப்பி நியூ இயர்' ஆஃபர்

  shriram   | Last Modified : 01 Dec, 2016 03:36 pm

ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ சிம் கார்டு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கும் புதிதாக வாங்க இருப்பவர்களுக்கும் மேலும் 3 மாதங்கள் இலவச ஆஃபர் நீட்டிப்பதாக அந்நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார். டிசம்பர் 4ஆம் தேதி துவங்கும் இந்த ஆஃபரின் மூலம் ஏற்கனவே கொடுத்துவரும் இலவச கால்கள், எஸ்.எம்.எஸ், டேட்டா உள்ளிட்ட சேவைகள் தொடரும். ஆனால், இலவச டேட்டா ஒரு நாளைக்கு 1 ஜிபி என கட்டுப்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. வீட்டுக்கே வந்து ஜியோ சிம்களை ஹோம் டெலிவரி செய்யும் சேவையை அறிமுகப் படுத்தியுள்ளதாகவும், டிச 31ஆம் தேதிக்குள் நாடு முழுவதும் 100 நகரங்களில் இந்த திட்டம் செயல்படும் என்றும் உறுதியளித்தார். அம்பானியின் அறிவிப்பின் முக்கிய அம்சங்கள்: *5 கோடி வாடிக்கையாளர்களை ஜியோ கடந்துள்ளது *நாடு முழுவதும் 2 லட்சம் e-KYC மையங்கள் மூலம் ஜியோ சிம்கள் வழங்கப்படுகின்றன *இந்த மாத இறுதிக்குள் ஹோம் டெலிவரி சேவை. 5 நிமிடத்தில் சிம் கார்டை பெறலாம் *கடந்த மாதங்களில் முன்னணி நெட்வர்க்குகள் ஜியோ சிம் மூலம் வரும் சுமார் 900 கோடி கால்களை தடுத்துள்ளன. ஆனால் தற்போது அது 90% குறைந்துள்ளது. *மொபைல் நம்பர் போர்ட்டபிலிட்டி வசதியின் மூலம் இனி உங்கள் பழைய நம்பரில் ஜியோ சிம்களை பெறலாம் *ரூபாய் நோட்டுக்களை தடை செய்த முடிவை ஆதரிப்பதாக கூறிய அவர் டிஜிட்டல் பணத்தின் முக்கியத்துவம் கருதி இனி சிறு கடைகளிலும் ஜியோ கேஷ் மூலம் பரிவர்த்தனைகள் நடத்த அதிக வசதி செய்துகொடுக்கப்படும் *இதற்காக நாடெங்கும் லட்சக்கணக்கான மைக்ரோ ஏ.டி.எம்கள் அமைக்கப்படும்

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close