டிஜிட்டல் முறையில் பணப் பரிவர்த்தனைக்கு சலுகை - மத்திய அரசு

  mayuran   | Last Modified : 09 Dec, 2016 10:25 am

ரூபாய் நோட்டுக்கள் வாபஸ் பெறப்பட்டதை அடுத்து டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக்கு அதிகமான மக்கள் மாறி வருகின்றனர். இந்நிலையில் டிஜிட்டல் பரிவர்த்தனையை அதிகரிக்கும் வகையில் புதிய சலுகைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன் படி, பெட்ரோல் நிலையங்களில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தினால் 0.75% தள்ளுபடி அளிக்கப் படும். இதே போல் புறநகர் ரயில்களில் மாதாந்திர மற்றும் சீசன் டிக்கெட்களை டிஜிட்டல் பரிவர்த்தனை கீழ் வாங்கும் போது 0.5% தள்ளுபடியும், ரயில்நிலைய உணவகங்களில் கிரெடிட்/டெபிட் கார்டு மூலம் வாங்கும் பொருட்களுக்கு 5% தள்ளுபடியும் வழங்கப்படும். இணையவழி ரயில் டிக்கெட் பதிவு செய்யும் பயணிகள் அனைவருக்கும் 10 லட்சம் காப்பீடு அளிக்கப் படும். மேலும் பொது காப்பீடு திட்டங்களுக்கு 10% தள்ளுபடியும் ஆயுள் காப்பீடு திட்டங்களுக்கு 8% தள்ளுபடியும் கிடைக்கும். கிசான் கிரெடிட் கார்டு வைத்திருப்போருக்கு நபார்டு வங்கி மூலம் ரூபே கிசான் கார்டு வழங்கப்படும். வணிகர்களிடம் PoS (point of sale) terminals, micro ATMs, mobile POS போன்றவற்றிக்கு 100 ரூபாய் மட்டும் வாடகையாக வசூலிக்கும் படி பொது துறை வங்கிகளுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது. மேலும் கிராம புறங்களில் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக புதிதாக ஸ்வைப்பிங் மெஷின் வழங்கவும் உத்தரவிடப் பட்டுள்ளது. இதற்காக 1 லட்சம் கிராமங்கள் இந்தியா முழுவதும் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளன.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close