Hotstar-க்கு போட்டியாக களமிறங்கிய அமேசான்!!

Last Modified : 15 Dec, 2016 05:54 pm

கடந்த ஜூலை மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட Prime சேவையை தொடர்ந்து Prime வீடியோ சேவையை இந்தியாவில் அமேசான் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்தியா உட்பட 200-க்கும் மேற்பட்ட நாடுகளிலும், பகுதிகளிலும் இந்த சேவை அறிமுகப் படுத்தப் பட்டது. இந்தியாவில் Prime வாடிக்கையாளர்கள் எந்த வித கட்டணமும் இன்றி இச்சேவையை பெறலாம். Prime வாடிக்கையாளர் அல்லாதவர்கள் வருடாந்திர சந்தாவன 499 ரூபாயை செலுத்தி இச்சேவையை பெற்றுக் கொள்ளலாம். ஆண்ட்ராய்டு மற்றும் iOS இயங்குதளங்களில் வெளிவந்துள்ள Prime வீடியோ செயலியை தரவிறக்கம் செய்து வீடியோக்களை காணலாம். மேலும் www.PrimeVideo.com என்ற இணையதளம் மூலமாகவும் பார்க்கலாம். Bodhidharma: Master of Shaolin, Breathe, The Ministry, Powerful, Mirzapur, Stardust உள்ளிட்ட இந்திய நிகழச்சிகளுடன் Transparent, Mozart in the Jungle and The Man in the High Castle உள்ளிட்ட வெளிநாட்டு நிகழ்ச்சிகளையும் பார்க்கலாம். இந்திய வாடிக்கையாளர்களை கவரும் விதமாக பல்வேறு திரைத்துறை நிறுவனங்களுடன் இணைந்து புதிய நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப அமேசான் திட்டமிட்டுள்ளது. குறிப்பிட்ட வெளிநாட்டு நிகழ்ச்சிகள், அங்கு ஒளிபரப்பப்படும் ஒரு சில மணி நேரங்களிலேயே இந்தியாவில் உள்ள Prime வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கும். ஆனால் அவை எந்தெந்த நாடுகள் என்பது குறித்த தகவல் இன்னும் தெரியவில்லை. மேலும் இதில் ஆப்லைனில் வீடியோக்களை பார்க்கும் வசதியும் உள்ளது. Netflix மற்றும் Hotstar போன்றவற்றிக்கு Amazon Prime Video-ன் வருகை கடும் போட்டியை அளித்துள்ளது. இதனால் இன்னும் பல புதிய ஆஃபர்களை இந்நிறுவனங்கள் வெளியிடும் என வாடிக்கையாளர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.