அதிக சம்பளம் பெறும் பெண் யார்?

  mayuran   | Last Modified : 20 Dec, 2016 06:17 pm

இந்தியாவில் அதிக வருமானம் ஈட்டும் தனியார் நிர்வாக இயக்குனர்கள் மற்றும் தலைவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், அதிக சம்பளம் பெறும் பெண்கள் பட்டியலில் முதலிடத்தை, தமிழகத்தை சேர்ந்த சன் குழுமத்தின் செயல் அதிகாரியான காவேரி கலாநிதி பெற்றுள்ளார். இவர் கணவர் கலாநிதி மாறனுக்கு இணையாக, ஆண்டுக்கு 71.5 கோடி ரூபாய் சம்பளம் பெறுகின்றார். Peninsula Land செயல் அதிகாரி உர்வி ஏ.பிரமல் ஆண்டுக்கு 7.3 கோடி ரூபாய் பெற்று இரண்டாவது இடத்தையும், அப்போலோ மருத்துவமனையின் பிரீதா ரெட்டி 6.9 கோடி ரூபாயுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர். கலாநிதி மாறனும் அவர் மனைவி காவேரி கலாநிதியும் தான் இந்தியாவில் அதிக சம்பளம் பெரும் நிர்வாக இயக்குனர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close