இனி 2000 ரூபாய் உங்கள் வீடு தேடி வரும்!!

Last Modified : 22 Dec, 2016 05:06 pm

ஏடிஎம் வாசலில் காத்திருந்து களைத்து போனவர்களுக்காக ஸ்னாப்டீல் நிறுவனம் புதிய சேவை ஒன்றை துவங்கி உள்ளது. "Cash@Home" எனும் இச்சேவையின் மூலம் உங்கள் வீட்டிற்கே வந்து பணம் கொடுத்து செல்கின்றனர். இதற்கு முதலில் உங்கள் மொபைலில் ஸ்னாப்டீல் ஆப்பை இன்ஸ்டால் செய்ய வேண்டும். பின்னர் உங்கள் மொபைலின் லொகேஷனை பயன்படுத்தி அருகில் உள்ள பகுதிகளில் பணம் உள்ளதா, என சோதனை செய்ய வேண்டும். பின்னர் பணம் இருந்தால் எஸ்எம்எஸ் மூலம் தகவல் கிடைக்கும். அந்த எஸ்எம்எஸ்-ல் உள்ள லிங்கை பயன்படுத்தி 2000 ரூபாய் வரை ஆர்டர் செய்து கொள்ளலாம். இதற்கு 1 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப் படும். ஆர்டர் செய்த மறுநாள் உங்கள் வீட்டிற்கு வரும் ஸ்னாப்டீல் ஊழியரிடம் உள்ள POS மெஷினில் கார்டை ஸ்வைப் செய்து பணத்தை பெற்றுக் கொள்ளலாம். ஒரு நாளைக்கு, ஒரு முறை, 2000 ரூபாய் வரை மட்டுமே இச்சேவை மூலம் பெற முடியும். இந்த சேவை, தற்போது பெங்களூர், மும்பை மற்றும் குர்காவோன் பகுதிகளில் வழங்கப்படுகிறது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close