வருகிறது பேஸ்புக்கில் லைவ் Audio

  mayuran   | Last Modified : 22 Dec, 2016 09:51 pm

பேஸ்புக் தனது வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்ள நாளுக்கு நாள் புதுமையான தொழில்நுட்பங்களை புகுத்தி வருகிறது. அண்மையில் வெளியிட்ட 'பேஸ்புக் லைவ்' பலரின் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. அது மட்டுமின்றி பேஸ்புக் பக்கங்களில் பிரத்தியேக மென்பொருட்கள் மூலம் லைவ் படங்கள் ஒளிபரப்பப்பட்டு வந்தது அனைவரையும் ஈர்த்துள்ளது. சிலர் வீடியோ லைவ் மூலம் ஆடியோக்களை ஒளிபரப்பு செய்து வருகின்றனர். ஆடியோ மட்டும் கேட்க விரும்புபவர்கள் விடியோவையும் சேர்த்து ப்ளே செய்வதால் அதிகமான டேட்டா விரையமாவதால் பலர் வீடியோக்கள் பார்ப்பதை தவிர்க்கின்றனர். இதற்கு தீர்வு காணும் முகமாக பேஸ்புக், ஆடியோ லைவ் வசதியை அறிமுகப் படுத்தவுள்ளது. ஒலிப்பதிவு செய்திகள், பேட்டிகள், இசைக்கலைஞர்கள் இசை நிகழ்ச்சிகள் போன்றவற்றை ஒலிபரப்புவதோடு கேட்டு கொண்டிருக்கும் போதே அந்த ஒலிபரப்பை மற்றவர்களுக்கு பகிரவும் முடியும். இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டால் அதிகமான இணைய வானொலிகள் உருவாகலாம் என எதிர்பார்க்கப் படுகிறது. ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் ஸ்மார்ட்போனில் பேஸ்புக் ஆப்பிலிருந்து வெளியேறினாலும், மொபைலை லாக் செய்தாலும் பேஸ்புக் லைவ் ஆடியோவை கேட்க முடியும் என்பதே இதன் சிறப்பம்சமாகும்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close