3G வாடிக்கையாளர்களையும் குறி வைக்கும் Jio

  mayuran   | Last Modified : 22 Dec, 2016 08:59 pm

இந்திய தொலைத்தொடர்பு துறையில் அதிரடியாக நுழைந்த ரிலையன்ஸ் ஜியோ 4G, அடுத்தடுத்ததாக பல அதிரடி ஆஃபர்களை வழங்கி வாடிக்கையாளர்களை அதிகரித்த வண்ணம் உள்ளது. இதுவரை 5 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளது. ஜியோவின் அளவில்லா இலவச இண்டர்நெட் டேட்டா மற்றும் அழைப்பு வசதிகளை பயன்படுத்துவதற்காக, பலர் 4ஜி ஸ்மார்ட்போன்களை வாங்கி வருகின்றனர். இந்நிலையில் 3G ஸ்மார்ட்போன் வைத்துள்ளவர்களும் ஜியோவின் 4ஜி சிம்மை பயன்படுத்த புதிய அப்ளிகேஷனை இந்த மாத இறுதியில் வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்மூலம், மேலும் சில கோடி வாடிக்கையாளர்களை ஈர்க்க ரிலையன்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

Advertisement:
[X] Close